பெருமாள் படத்தினை எந்த திசையில் வைத்து வழிபட்டால் தெய்வ அருள் கிட்டும்?

 

ருத்ரா -விசேட நிருபர்

பொதுவாக சுவாமிப்படங்களை பூஜை அறையில் கிழக்கு / வடக்கு நோக்கியே வைக்கப்படும்.இந்தத் திசைகள் பரிசுத்தமானவை.
ஆனால் சில தெய்வங்கள் இதற்கு மாறானவை.

¤.கணபதி சிலையினை வடக்கு தெற்கு நோக்கியே வைக்க வேண்டும்.

¤. சிவன் சிலை என்றால் வடக்குத் திசையில் வைத்து வழிபடலாம்.

பெருமாள் மற்றும் லட்சுமி படங்களை கிழக்கு/வடக்கு நோக்கியே வைப்பது நன்மைகள் அளிக்கும் அதிலும் விஷேடமாக வீட்டிற்குள் நுழைந்ததும் நேராக தெரியும் படி வைத்தால் சிறந்த பலன் கிட்டும்.
அத்துடன் பெருமாள் வழிபாட்டுடன் சாளக்கிராம கற்கள் வைத்து வழிபடுவது அதீத செல்வச் செழிப்பினைப் பெற்றுத்தரும்.

இவ்வாறு கிழக்கு / வடக்கு நோக்கியவாறு நம் இல்லத்தில் பெருமாளின் திருவுருவப்படத்தினையோ சிலையினையோ வைத்து வழிபடுவதன் மூலம் ,

☆.ஐஸ்வர்யம் நிறையும்.
☆.மனநிம்மதி கிடைக்கும்.
☆.புகழ் கிட்டும்.
☆.மனமகழ்சியுடனான வாழ்வினைப் பெறுவர்.

குறிப்பு :- பூஜை அறையில் கிழக்கில் வைத்து மேற்குத் திசை நோக்கி கடவுள் சிலைகள் மற்றும் திருவுருப் படங்களை வைத்து வழிபடுவதன் மூலம் வீட்டினுள் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.