மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனால் பேரிடரால் இடம்பெயர்ந்த பதுளை மாவட்டத்தில் 185 குடும்பங்களுக்கு நிவாரணம் .

 











பேரிடரால் இடம்பெயர்ந்த பதுளை மாவட்டத்தின்  கீனா கலை மற்றும் தங்கமலை பிரதேசங்களில் 185 குடும்பங்களுக்கு உலர் உணவு உடைகள் பெட் சீட் பாய் போன்ற பொருட்கள் இராமகிருஷ்ண மிஷனால்  இன்று (9) செவ்வாய்க்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

உலகளாவிய இராமகிருஷ்ண மிஷனின் மட்டக்களப்பு மாநில பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் நேரடியாக சென்று அவற்றை வழங்கி வைத்தார்.


பதுளை மாவட்டத்தில் சுவாமி ருத்ரானந்த சரஸ்வதி   வழங்குவதற்கான ஏற்பாடுகளை உள்ளூர் வாசிகளுடன் இணைந்து  செய்திருந்தார். 
 
 
 ( வி.ரி. சகாதேவராஜா)