ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷினின் தூய அன்னை ஸ்ரீ சாரதா தேவியாரின் 173 வது ஜெயந்தி தின விழா இன்று (11) வியாழக்கிழமை
மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ண மிஷன் ஆச்சிரமத்தில் எளிமையாக நடைபெற்றது.
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ
மஹராஜ் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது. மாணவரில்லம் மற்றும் சாரதா
சிறுமியர் இல்லம் இரண்டு இடங்களிலும் நடைபெற்றது.
உதவி பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி உமாதீஷானந்தா ஜீ மஹராஜ்ஜும் குருகுல மாணவர்களும் கலந்து கொண்டார்கள்.
எனினும், இன்று 11.12.2025 ஜெயந்தி நிகழ்வுகள் வழமையான முறையில் நடைபெற்ற போதிலும்,
நாட்டில்
ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களின் காரணமாக மக்கள் பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அன்னை ஸ்ரீ சாரதா தேவியாரின் ஜெயந்தியை
முன்னிட்டு நடைபெறும் ஊர்வலம் இம்முறை நடைபெறவில்லை.










