மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பத்மநாபா ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண கால்பந்தாட்ட சுற்றுத் தொடரில் ஏறாவூர் YSSC சம்பியன் பட்டத்தை வென்றது. மாவட்டத்தின் 34 முன்னணி விளையாட்டுக் கழகங்கள் கலந்து கொண்ட இந்தத் தொடரின் இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்றது. இதில்; பாலமுனை NSC அணியை எதிர்கொண்ட ஏறாவூர் YSSC 3–0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. சம்பியனான YSSC 200,000 பணப் பரிசிலையும் பெற்றுக் கொண்டதுடன் தொடரின் சிறந்த ஆட்டநாயகனாக இன்ஷாப் தெரிவு செய்யப்பட்டார்.





