மட்டக்களப்பு புளியந்தீவு குழந்தை யேசு முன்பள்ளியின் (Child Jesus Pre-school) வருடாந்த கலைவிழாவும் மற்றும் பரிசளிப்பு நிகழ்வும் புதன்கிழமை (05)) சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை வளாகத்தில் அமைந்துள்ள குழந்தை யேசு முன்பள்ளி மண்டபத்தில் இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர் . மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், வரவேற்புரை, வரவேற்பு நடனம் ஆகிய சம்பிரதாய நிகழ்வுகளும் இடம்பெற்றன.
குழந்தை யேசு முன்பள்ளிப் பாடசாலை அதிபர் அருட்சகோதரி ரூபினி தலைமையில் இடம் பெற்ற விழாவிற்கு , தேசிய கல்வி நிறுவகத்தின் ஓய்வுநிலை பணிப்பாளர் வி.என்.எஸ்.உதயச்சந்திரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார் .
முன் பிள்ளைப் பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. அனுரேகா விவேகானந்தன் கௌரவ அதிதியாகவும் , சிறப்பு அதிதியாக பொத்துவில் திருக்கோவில் திருச்சபைப் பாதிரியார் வணபிதா திலிப் ரஞ்சனகுமார் அவர்களும் பங்கேற்றிந்தார்கள்
நான்கு கட்டங்களாக அதிதிகளால் சிறார்களுக்கு பதக்கம் அணிவிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
ஒவ்வொரு பரிசளிப்பு முடிவிலும் சிறார்களின் கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன .
பாடசாலைச் சிறார்களின் ஆடல், பாடல், நாடகம்
பார்ப்போரை மேன் மேலும் பரவசத்தில் ஆழ்த்தியது.
சிறார்களின் ஆற்றல் திறனை அவர்களது கலை நிகழ்வுகள் வரித்துக் காட்டின.
சிறார்களை பயிற்றுவித்த முன்பள்ளி ஆசிரியர்கள் பாராட்டுக்கு உரியவர்கள் .
நிகழ்வுகளில் பங்கேற்ற அனைத்து சிறார்களுக்கும் பரிசுப்பொதிகள் வழங்கப்பட்டன . அதிதிகளுக்கும் பாடசாலை சமூகத்தால் நினைவு பரிசில்கள் வழங்கப்பட்டன
பெற்றோர்கள் , பொது மக்கள் நலம் விரும்பிகள் என பலரும் கலை விழாவை காண வருகை தந்திருந்தனர் .
கல்வி நிர்வாக சேவை அதிகாரியும் குழந்தை யேசு முன்பள்ளியின் செயலாளருமான திருமதி அனோஜா ஜனார்த்தனன் அவர்களின் நன்றியுரையோடு நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது .
EDITOR










































































