வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போன தம்பதியினரின் உடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 


வெலிமடை - பொரலந்த, , கண்டேபுஹுல்பொல பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போன தம்பதியினரின் உடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
 
37 வயதுடைய ஆணின் உடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டது, அதே நேரத்தில் 32 வயதுடைய பெண்ணின் உடலம் நேற்று (17) பிற்பகல் அப்பகுதியினரால் கண்டெடுக்கப்பட்டது. 
 
அவரது உடலம் வெலிமடை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 
 
வெலிமடை பகுதியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கால்வாயைக் கடக்க முயன்றபோது நேற்று தம்பதியினர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.