மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கான ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பான செயலமர்வு

 

 


 

















மட்டக்களப்பு  பிராந்தியத்தில் கடமையாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொதுச் சுகாதார மருதுவ மாதுக்கள் மற்றும் பிராந்திய மலேரிய தடையியக்கப் பிரிவின் உத்தியோகத்தர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பான செயலமர்வு இன்றைய தினம் 2025.11. 14 மட்டக்களப்பு  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் DR.R.முரளிஸ்வரன் அவர்களின் அறிவுறுத்தலின் படி, நிர்வாக உத்தியோகத்தரின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது. இதில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் திரு.S.கரன் மற்றும் பிராந்திய பணிமனையின் நிருவாக உத்தியோகத்தர் திரு.தி. ரகுராஜா ஆகியோர் வளவாளராக பங்கேற்றனர்.