மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கிராம சேவை
உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அலுவலக
முகாமைத்துவம், உற்பத்தித்திறன் செயற்பாடுகள் மற்றும் நிதிப்பிரமாணங்கள்
தொடர்பான பயிற்சி நெறிகள் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 13.11.2025
பிரதேச
செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலில்
நிருவாக உத்தியோகத்தர் திரு.வே. தவேந்திரன் அவர்களின் தலைமையில்
நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு வளவாளர்களாக மண்முனை தென் எருவில்பற்று
பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திரு.உ.உதயஸ்ரீதர் அவர்களும், மண்முனை
மேற்கு பிரதேச செயலக கணக்காளர் திரு.S.சுந்தரலிங்கம் அவர்களும் கலந்து
சிறப்பித்தனர்.
இப்பயிற்சி நெறியில் கிராம சேவை உத்தியோகத்தர்கள்
மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு பயன் பெறும் வகையில்
இப்பயிற்சி நெறி அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.