மட்டக்களப்பு மாவட்டத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தங்க வர்ணம் பெற்ற மத்திய சுற்றாடல் முன்னோடி குழு மாணவர்களுக்கான மாவட்ட மட்ட பயிற்சி பாசறையானது மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவி பணிப்பாளர் ரீ. சுந்தரேசன் தலைமையில் சர்வோதயா மண்டபத்தில் (17) இடம் பெற்றது.
சுற்றாடல் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் மத்திய சுற்றாடல் அதிகாரசபையால் (CEA) வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் மாவட்ட மட்ட பயிற்சி பாசறை நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் கல்வி விழிப்புட்டல் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி அஜித் குணவர்தன கலந்து சிறப்பித்தார்.
இதன் போது சுற்றால் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் பெறவுள்ள மாணவர்களுக்கான தலைமைத்து மற்றும் ஆளுமை விருத்தி தொடர்பான இருநாள் பயிற்சி பாசறை நிகழ்வு இடம் பெறவுள்ளன.
இந் நிகழ்வில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் திரு.எஸ்.உதயராஜன் வலய கல்வி பணிப்பாளர்கள், உதவி கல்வி பணிப்பாளர்கள், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலக அதிகாரிகள் , சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித்திட்ட பொறுப்பாசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.













