இந்தியாவின் சிற்பி அண்ணல் மகாத்மா காந்தி நினைவு தின தேசிய கௌரவ பட்டம் வழங்கும் விழா நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை மாலை மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மலையக கலை கலாசார சங்கம் ( இரத்தின தீபம்)
நாட்டின் உயர்ச்சிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் அர்ப்பணிப்போடு சேவை
ஆற்றிய மக்கள் நலன் பேணும் மனிதநேயமிக்கவர்களை கௌரவிக்கு முகமாக இத் தேசிய
பட்டமளிக்கும் விழாவை ஏற்பாடு செய்திருந்தது.
சங்கத்தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதியாக
கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம் எச் எம். ஜாபீர் கலந்து
சிறப்பித்தார் .
இங்கு 15 பேராளர்கள் கௌரவ பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி. சகாதேவராஜா “தேச அபிமானி ஊடகவிபூஷணம் ” பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மாணவரின் கலைநிகழ்ச்சிகளும் மகாத்மா காந்தி நினைவு தின உரையும் இடம்பெற்றன.
( வி.ரி.சகாதேவராஜா)




















