மட்டக்களப்பில் சட்டத்தரணி
போன்று மக்களை ஏமாற்றி பண மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள்,
சட்டத்தரணியைப் போன்று உள்நுழைந்து, வழக்காடி தருவதாகப் பொதுமக்கள் பலரிடம்
பல இலட்சம் ரூபாவை மோசடி செய்ததாக, அவர் மீது குற்றம்
சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று முன் தினம் கைது
செய்யப்பட்ட அவர் விசாரணையின் பின்னர் நேற்று நீதிவான் முன்னிலையில்
பிரசன்னப்படுத்தப்பட்ட போது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான்
உத்தரவிட்டுள்ளார்.





