நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தமிழரசுக் கட்சி தயாராகவுள்ளதாக அந்த கட்சியின் யாழ் மாவட்ட எம்பி சத்தியலிங்கம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டில் நிரந்தர அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்காக புதிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக ஜனாதிபதி தமது குழுவிடம் தெரிவித்ததாக சபையில் குறிப்பிட்ட அவர், அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தமிழரசுக் கட்சி தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.





