இந்து
சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடாத்திய இவ்வாண்டு க்கான அறநெறி
மாணவர்களுக்கான தேசிய மட்ட தேசியமட்ட பண்ணிசைப்போட்டியில் காரைதீவு கண்ணகி
அறநெறி பாடசாலை மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்
இப் போட்டி கொழும்பு கலைமகள் தமிழ் மகாவித்தியாலயத்தில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்றது.
இறுதிப் போட்டியில் யாழ்ப்பாண மாவட்டத்தை எதிர்த்து போட்டியிட்ட அம்பாறை மாவட்ட காரைதீவு அணி முதலிடத்தை பெற்றுக்கொண்டது
( வி.ரி.சகாதேவராஜா)






