இலங்கையும் இந்தியாவும் மித்ரா சக்தி என்ற இராணுவப் பயிற்சியை கர்நாடகாவில் இன்று ஆரம்பிக்கின்றன.

 


இந்தியாவும் இலங்கையும் மித்ரா சக்தி என்ற இராணுவப் பயிற்சியை இன்று ஆரம்பிக்கின்றன. 
 
இந்த பயிற்சிகள் எதிர்வரும் 23ஆம் திகதிவரை கர்நாடகாவின் பெலகாவி என்ற இடத்தில் நடத்தப்படவுள்ளதாக இந்திய பாதுகாப்பு இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. 
 
11ஆவது வருடமாக இந்த பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. 
 
பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு உட்பட்ட பல்வேறு நோக்கங்களின் அடிப்படையில் இந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
 
முன்னதாக இரண்டு நாட்டுப் படையினருக்கு இடையிலான 10வது வருடப் பயிற்சிகள், இலங்கையின் மாதுருஓயாவில் நடத்தப்பட்டன.