மட்டக்களப்பு வந்தாறுமூலை மகா விஷ்ணு தேவஸ்தானத்தின் நிர்வாக சபைக்கு உட்பட்ட ஆலயங்களின் புதிய நிர்வாக தெரிவுக்கான பொதுக் கூட்டம்.

 


 






கிழக்கிலங்கையின் திருப்பதி என்று போற்றப்படுகின்ற வந்தாறுமூலை ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீமன் மகா விஷ்ணு தேவஸ்தானத்தின் நிர்வாக சபைக்கு உட்பட்ட ஆலயங்களின் புதிய நிர்வாக தெரிவுக்கான பொதுக் கூட்டமானது நடைமுறையிலுள்ள  பாரம்பரிய முறைப்படி வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஷ்ணு தேவஸ்தான முன்றலில் இடம்பெற்றது.

ஆலய உப தலைவர் கா.யோகராசா தலைமையில் நடைபெற்ற இப்பொதுக் கூட்டத்தில் தலைவராக குமாரசாமி சிறியும் , செயலாளராக காத்தமுத்து யோகநாதனும், பொருளாளராக ஈஸ்வரமூர்த்தி கலைச்செல்வனும், உபதலைவராக காத்தமுத்து யோகராசாவும், உபசெயலாளராக நல்லரெட்ணம்   லம்போசனனும் தெரிவு செய்யப்பட்டனர்.

இதன் போது தம்மை இந்த இறை பணியை செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கிய குடிமக்கள் மற்றும் பொது மக்களுக்கும் புதிய  நிர்வாகத்தினர் நன்றிகளை தெரிவித்தத்துடன், அதற்கான ஒத்துழைப்பை சகல மக்களிடமும் கேட்டுக் கொண்டனர்.

இறுதியாக செயலாளர் காத்தமுத்து யோகநாதன் அவர்களின் நன்றியுடன் பொதுக் கூட்டம் நிறைவு பெற்றது.