முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி செலுத்தினார் இந்திய நாடாளுமன்ற உறுப் பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன்.

 


முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் இந்திய நாடாளுமன்ற உறுப்
பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல்.
திருமாவளவன் நேற்று முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு சென்று உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.


நேற்று பலாலி விமானத் தளம் ஊடாக யாழ் வந்த அவர் நேற்றே முல்லைத்தீவு
மாவட்டத்திற்கும் அவரின் வருகை தந்தார்.  அவரை அப்பகுதி பொதுமக்கள்
வரவேற்று, பொன்னாடை போர்த்திமரியாதை செய்தனர்.


அதனைத் தொடர்ந்து, கவிஞர் யோ. புரட்சி தன்னுடைய 'ஆயிரம் கவிதை
கள்' நூலை தொல். திருமாவளவன் அவர்களிடம் கையளித்தார்.
  பின்னர் திருமாவளவன் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சென்றடைந்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கான பொதுத் தூபிக்கு மலர்மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.



முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தத மிழர்களை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வு,   உள்ளூர் மக்களிடையே பெரும் உணர்ச்சி பூர்வமான சூழலை ஏற்படுத்தியது.