நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர்களும் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

 


நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர்களும் இன்று  கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 

2026 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் 'பிரஜாசக்தி' கிராமிய அபிவிருத்தி அணுகுமுறை குறித்து தெளிவுபடுத்துவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இந்த விசேட கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் அலரி மாளிகையில் உள்ள பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. 

கிராமிய வறுமையை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் மிக முக்கிய முன்னுரிமைத் திட்டமாக 'பிரஜாசக்தி' வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

இத்திட்டத்தை அடிமட்ட அளவில் எவ்வாறு பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து, இதன்போது பிரதேச செயலாளர்களுக்கு விரிவாகத் தெளிவுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.