பாடசாலை நேரம் நீடிக்கப்படுவதால் மாணவர்கள் கற்றுக்கொள்வதற்கும் ஆசிரியர்கள் அவர்களை மதிப்பீடு செய்வதற்கும் சிறந்த சந்தர்ப்பம் கிடைக்கும் .

 


பாடசாலை நேரம் நீடிக்கப்படும் பட்சத்தில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 
 
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 
 
அத்துடன் பாடசாலை நேரம் நீடிக்கப்படுவதற்கான காரணம் குறித்தும் பிரதமர் இதன்போது விளக்கமளித்தார். 
 
புதிய கல்விச் சீர்திருத்தங்களுடன் ஒத்துப்போகும் வகையில் பாடசாலை நேரம் நீடிக்கப்படுகின்றது. 
 
இதன் மூலம், மாணவர்கள் கற்றுக்கொள்வதற்கும் ஆசிரியர்கள் அவர்களை மதிப்பீடு செய்வதற்கும் சிறந்த சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.