மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலக முதியோர் தலயாத்திரை.









முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் அனுசரணையுடன் மண்முனைப்பற்று பிரதேசசெயலக சமூகசேவை பிரிவு இணைந்து மதிப்பிற்குரிய பிரதேச  செயலாளர் திருமதி  தெட்சணகௌரி தினேஷ்  அம்மணி அவர்களின் தலைமையில் இவ் ஆண்டுக்கான முதியோர்களுக்கான ஆன்மீக சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகள்  ஒழுங்குசெய்யப்பட்டது.

இதில் கோவில்குளம் ஆஞ்சனேயர் முதியோர்சங்க முதியோர்கள்  அழைத்துச் செல்லப்பட்டனர்.   திருகோணமலையின் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த இடங்களுக்கான தல யாத்திரையாக அமைந்திருந்தது இதில் மதம் இனம் கடந்து நல்லிணக்கத்துடன் முதியோர்கள் ஒன்றாக கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.