முச்சக்கர வண்டியொன்றில் சவாரிக்கு செல்லும் போர்வையில் ஏறி சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து ஐந்து லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவரை தேடி பொகவந்தலாவை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொகவந்தலாவை பெட்ரா சோ தோட்டத்தில் வசிக்கும் முச்சக்கர வண்டி சாரதி இது தொடர்பில் பொகவந்தலாவை காவல்நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
கர்கசோல் எஸ்டேட் அலுவலகம் அருகில் இருந்து தனது முச்சக்கர வண்டியில் ஏறிய சந்தேகநபர், நன்றாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தாக முறைப்பாட்டாளர் கூறியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.





