மட்டக்களப்பு கல்குடா – பாசிக்குடா கடலில் நீராட சென்ற ஒருவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று பாசிக்குடா கடலில் நீராட சென்ற ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீரில் அடித்து செல்லப்பட்டவர் பொலன்னறுவை பகுதியை சேர்ந்த 39 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காணாமல் போன நபரைத் தேடும் பணியில் பொலிஸ் உயிர்காப்பாளர்கள், கடற்படை உயிர்காப்பாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள் ஈடுபட்டுள்ளனர்.





