புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி
அவர்களின் எண்ணக்கருவில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்
ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் ஆலோசனையின் பெயரில் இலங்கை கலைக்கழகத்தின்
அனுசரணையோடு, மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன்
அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்படுகின்ற "திரி - நாதம்"
இன்னிசை நிகழ்வு மற்றும் "வாத்யாபிமானி" மட்டக்களப்பு மாவட்டத்தை
பிரதிநிதித்துவப் படுத்துகின்ற இசை வாத்தியக்கலைஞர்கள் மூவரை தெரிவு செய்து
விருது வழங்கி கௌரவிக்கும் குறித்த நிகழ்வு 23.11.2025 திகதி பி.ப 2.00
மணிக்கு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் இராசதுரை
அரங்கில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில்
புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு விசேட விருந்தினராகவும், இலங்கை கலைக்கழகத்தின் செயலாளர் கே.எச்.தயந்த, மண்முனை வடக்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.சுபா சதாகரன், சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் பேராசிரியர் பாரதி கெனடி,
இலங்கை கலைக்கழக உறுப்பினரும் வெல்வூட் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளருமான விஷ்வநாதன் சதானந்தன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொள்ளவுள்ளனர்.
குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இசை வாத்தியக்கலைஞர்களான
கனகரெட்ணம் கனகசடாட்சரம்,
செல்வி.சரஸ்வதி சுப்பிரமணியம்,
அன்ரனி சத்தியசீலன் பாய்வா ஆகிய மூவரும் பிரதம அதிதியுள்ளிட்ட அதிதிகளினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், "திரி - நாதம்" இன்னிசை நிகழ்வு இசைப் பிரியர்களுக்கு விருந்தளித்தமையும் குறிப்பிடத்தக்கது.