ஜனாதிபதி ஆரம்பித்துள்ள ஊழல் மற்றும் போதை ஒழிப்புக்கு எதிரான நடவடிக்கை முழுமையாக வெற்றியடையும் வரைக்கும் இந்த ஆட்சி நீடிக்க வேண்டும்

 

 


இந்த நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து மாறி மாறி ஆட்சி செய்துகொண்டு ஊழளில் ஈடுபட்டது மட்டுமல்லாது இனவாதத்தை விதைத்து ஆயுதப் போராட்டத்துக்கு தூபமிட்டு நாட்டை நாசமாக்கியது ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுமாகும். இவர்களது புதிய அவதாரம்தான் பொதுஜன பெரமுன.

கடந்த வருடம் நடைபெற்ற தேர்தல்கள் மூலம் அனுரகுமார திஸ்சானாயக்கா தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினருக்கு ஆட்சி செய்வதற்காக ஐந்து வருடங்களுக்கு மக்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள்.

NPP யினர் தேர்தல் காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும். அதாவது ஐந்து வருடங்களுக்குள் பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றினாலே அது ஏற்றுக்கொள்ளக்கூடியது. 

75 வருடங்கள் இவர்களால் செய்ய முடியாததை ஒரு வருடத்துக்குள் நிறைவேற்ற வேண்டுமென்று எதிர்பார்ப்பது எந்தவகையிலும் நியாயமற்றது.

கடந்த காலங்களில் பச்சை, நீலம் ஆகிய கட்சிகள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை அதிகாரத்தில் இருந்தபோது முழுமையாக நிறைவேற்றியதாக இல்லை.    

எனவேதான் நேற்று நுகேகொடையில் நடைபெற்ற அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் பேரணியானது ஏற்றுக்கொள்ள முடியாததும், நியாயமற்ற ஒன்றாகும். அதாவது மக்கள் வழங்கிய ஆணைக்கு முரணானது.

ஏழைகளின் பிள்ளைகள் நாட்டை ஆளுகின்றபோது முதலாளித்துவ சக்திகளுக்கு காழ்ப்புணர்ச்சி ஏற்படுவது வழமை. இருந்தாலும் இன்றைய ஜனாதிபதி ஆரம்பித்துள்ள ஊழல் மற்றும் போதை ஒழிப்புக்கு எதிரான நடவடிக்கை முழுமையாக வெற்றியடையும் வரைக்கும் இந்த ஆட்சி நீடிக்க வேண்டும் என்பது எனது வேண்டுதலாகும்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது