வீட்டிலிருந்து புறப்படும் போது தலைக்கவசம் அணிவதற்கு முதலில் பெற்றோர்கள்
ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் தேவையற்ற உயிரிழப்புகளை தவிர்க்க
முடியும் .
இவ்வாறு காரைதீவு பொலீஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்ட ஆர். ஐ. பி .ஜயரத்ன தெரிவித்தார் .
காரைதீவு போலீஸ் நிலையத்திற்கான ஆலோசனை குழுக் கூட்டம் நேற்று முன்தினம் அங்கு நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்..
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவின் விசேட ஏற்பாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .அதனை இப்பிரதேசத்திலும் நாங்கள் மும்முரமாக முன்னெடுப்போம். அதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு கட்டாயம் தேவை .
நாங்கள் இங்கு இருப்பது பொது மக்களின் சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக்காக .
ஆகவே எங்களை நீங்கள் பூரணமாக பயன்படுத்த வேண்டும். தலைக்கவசம் இல்லாமல் சென்று சம்பவித்த விபத்துக்களைப் பற்றி தினம் தினம் அறிகிறோம் .
நாங்கள் முன்மாதிரியாக செயல்படும் பட்சத்தில் எமது சேவையை நாடி மக்கள் வருவார்கள்.
உங்களின் ஒத்துழைப்பு பெரிதும் தேவையாகிறது. என்றார்.
( வி.ரி.சகாதேவராஜா)





