யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று பாரிய வெள்ளத்தில் சிக்கியுள்ளது,விரைந்தது ஹெலிகாப்டர்.

 


யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று பாரிய வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ராஜாங்கனை பகுதியில் வீதியை ஊடறுத்து செல்லும் வெள்ளத்தில் பேருந்து சிக்கியுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பேருந்தில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் நடவடிக்கையில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மீட்பு நடவடிக்கை இதற்காக பெல் 212 ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.