அநுராதபுரம் - புத்தளம் வீதியில் கலாவெவ பாலத்தில் பயணித்துக்கொண்டிருந்த பஸ் ஒன்று வெள்ளத்தில் சிக்கியதால் பயணிக்க முடியாமல் வீதியின் நடுவே நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் 70 பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பஸ் சுமார் ஒன்றரை மணி நேரமாக வீதியின் நடுவே நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ்ஸில் உள்ள பயணிகளை பாதுகாப்பாக மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.





