மட்டக்களப்பு மட்டிக்கழி வாசிகசாலையின் வாசகர் வட்டத் தலைவர் சிங்கராஜா விநோதன் மற்றும் மட்டிக்களி நூலகப் பொறுப்பாளர் தலைமையில் இடம் பெற்ற தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதிகளாக
கௌரவ மாநகர முதல்வர் சிவம் பாக்கிநாதன் , மாநகர ஆணையாளர் நா .தனஞ்ஜயன் கலந்து சிறப்பித்தார்கள் .
கௌரவ அதிதிகளாக கௌரவ பிரதி முதல்வர் வை . தினேஷ்குமார் , நூலக குழுத்தலைவர் து .மதன் மற்றும் மாநகரசபை உறுப்பினர் க.அருணன் ஆகியோர் கலந்து கொண்டனர் .
சிறப்பு அதிதிகளாக பிரதி ஆணையாளர் வ . தேவநேசன் , மாநகரசபை பொறியியலாளர் வீ.நதீசன் , பிரதம கணக்காளர் க. அரசரெத்தினம் , பொது நூலக நூலகர் T. சிவராணி, சனசமூக உத்தியோகத்தர் க. ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்று இருந்தார்கள் .
அழைப்பு அதிதிகளாக ஆதித்தி கைத்தறி நெசவு நிலைய பணிப்பாளர் திருமதி கீதா சுதாகரன் , மட்டிக்கழி கிராம அபிவிருத்தி சங்க தலைவர் S. கிருபாகரன் , மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதா அம்மன் ஆலய செயலாளர் க.முகுந்தன் , மட்டிக்கழி கதிரொளி விளையாட்டுக்கழக தலைவர் M.திவாகரன் கலந்து சிறப்பித்தார்கள் .
மேலும் நூலக குழு உறுப்பினர்களும் வருகை தந்திருந்தனர்
ஆரம்ப நிகழ்வாக அதிதிகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர் . மங்கல விளக்கேற்றல், இறை வணக்கம், வரவேற்புரை , வரவேற்பு நடனம் ,தலைமை உரை ஆகிய சம்பிரதாய நிகழ்வுகளும் இடம்பெற்றன.
தொடர்ந்து மாணவர்களின் கலாச்சார நடனங்கள் , பேச்சு என்பன இடம் பெற்றதோடு நூல் வெளியீடும் இடம் பெற்றது .
போட்டிகளில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப் பட்டது.
அமிர்தகளி, மட்டிக்களி, பாலமீன்மடு பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பொதுமக்கள் நலம் விரும்பிகள் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்
நன்றியுரையோடு நிகழ்வு இனிதே நிறைவுற்றது .
EDITOR




































































