2025 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த 100 நகரங்கள் தொடர்பான தரவரிசையொன்று வெளியிடப்பட்டுள்ளது, இங்கிலாந்தின் தலைநகரான லண்டன் நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

 


 

 2025 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த 100 நகரங்கள் தொடர்பான தரவரிசையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

ரெசோனன்ஸ் கன்சல்டன்சி (Resonance Consultancy) என்ற ஆலோசனை நிறுவனம் வெளியிட்ட இந்த தரவரிசைப் பட்டியல், ஃபோர்ப்ஸ் (Forbes) சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.



இந்த ஆய்வின்படி, இங்கிலாந்தின் தலைநகரான லண்டன் நகரம், தொடர்ந்து 10வது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக நியூயோர்க் மற்றும் பாரிஸ் ஆகிய நகரங்கள் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்துள்ளன.

ஒரு நகரத்தின் ஒட்டுமொத்த தரம், அதன் நற்பெயர், பொருளாதாரச் செழிப்பு, வாழத் தகுந்த சூழல் மற்றும் கலாசார ஈர்ப்பு போன்ற மூன்று முக்கிய அளவுகோல்களின் அடிப்படையில் இந்தத் தரவரிசை தீர்மானிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த உலகளாவிய பட்டியலில் இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களான பெங்களூரு (29வது இடம்), மும்பை (40வது இடம்), டெல்லி (54வது இடம்) மற்றும் ஹைதராபாத் (82வது இடம்) ஆகியவையும் இடம்பிடித்துள்ளன.

இந்த பட்டியலில் இலங்கையின் எந்தவொரு நகரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.