அரச நிதியை மோசடி செய்து
நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்களே, மலையக பெருந்தோட்ட
தொழிலாளர்களுக்கான 200 ரூபாய் வேதனம் வழங்குவதை எதிர்க்கின்றனர் என
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
எனினும், அரசாங்கத்தால் வழங்கிய
வாக்குறுதிக்கு அமைய 200 ரூபாய் ஊக்குவிப்பு தொகையை பெற்றுக் கொடுப்பது
உறுதி என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம், எதிர்க்கட்சியினருக்கு எதிரான போராட்டமாகவே மாறும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய
வாக்குறுதிகளை நினைவுபடுத்த, எதிர்வரும் 21 ஆம் திகதி அரசாங்கத்தை
வீழ்த்தும் போராட்டத்தில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சியினர் குறிப்பிடுவது
விந்தையாக உள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால
சுட்டிக்காட்டியுள்ளார்.





