லேக் ஹவுஸ் நிறுவனத்தின் அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடக அனுசரணையுடன் 22 ஆண்டுகளின் பின்னர் விளையாட்டுத் துறை அமைச்சினால் நடத்தப்படும் ‘லங்கா ரைட்’ சைக்கிளோட்டப்போட்டி எதிர்வரும் டிசம்பர் 18, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
லேக் ஹவுஸ் நிறுவனத்தால் நடத்தப்பட்டு வந்த இலங்கையின் மிகப்பெரிய சைக்கிளோட்டப் போட்டியின் தொடர்ச்சியாகவே விளையாட்டுத்துறை அமைச்சு புதிய வடிவில் இந்தப் போட்டியை நடத்தவுள்ளது. இது தொடர்பில் விளக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் உள்ள விளையாட்டுத்துறை அமைச்சில் நேற்று (12) இடம்பெற்றது. இதில் பங்கேற்ற விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் கமகே, இலங்கையில் சைக்கிளோட்டப் போட்டியை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதே இந்தப் போட்டியின் நோக்கம் என்று தெரிவித்தார்.





