மண்சரிவில் சிக்குண்டு 15 பேர் காணாமல் போயுள்ளனர்.

 


நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு 15 பேர் காணாமல் போயுள்ளனர். 
 
பதுளை மாவட்டச் செயலாளர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். 
 
இந்த அனர்த்தங்களில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
இதனிடையே, பதுளை-மஹியங்கனை வீதியின் தல்தேன, புசல்ல பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. 
 
இதன் காரணமாக மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.