கடந்த 11 மாதங்களில் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 2,183 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார
அமைச்சில் நிறுவப்பட்டுள்ள 1938 என்ற கட்டணம் இல்லா துரித அழைப்பு
இலக்கத்திற்கே இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக துறைசார் அமைச்சு
அறிவித்துள்ளது.
அவற்றில் அதிகப்படியாக வீட்டு வன்முறைகள் தொடர்பில் 1,488 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
அத்துடன் இணையக் குற்றங்கள் தொடர்பில் 234 முறைப்பாடுகளும், பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 07 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.





