உலகளவில் ஒவ்வொரு 10
நிமிடத்துக்கும் ஒரு பெண் அல்லது சிறுமி அவரது துணைவர் அல்லது குடும்ப
உறுப்பினரால் கொலை செய்யப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐ.நா. போதைப்பொருள் மற்றும்
குற்றத்துக்கான அலுவலகம் மற்றும் ஐ.நா. பெண்கள் அமைப்பு இணைந்து வெளியிட்ட
அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் கொல்லப்பட்ட 83,000 பெண்கள் மற்றும்
சிறுமிகளில் 60 சதவீதம் பேர் குடும்ப உறுப்பினர்களாலேயே
கொல்லப்பட்டுள்ளனர்.
ஆண்களில் இந்த எண்ணிக்கை வெறும் 11 சதவீதமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.





