பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100ஆவது ஜனன தினப் பெருவிழா நிகழ்வு, கொழும்பு புதுச்செட்டித் தெருவில் அமைந்துள்ள சாயி மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று (22) காலை ஆரம்பமானது.
இப்பெரு விழாவின் சிறப்பம்சமாக, ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு விசேட தபால் முத்திரை வெளியீட்டு விழா சாயி மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்றது.
சாய் மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கினங்க, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் பரிந்துரைக்கமைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஆலோசனையின் பிரகாரம், இந்த விசேட தபால் தலை முத்திரை வெளியிடப்பட்டது.
தபால் முத்திரை வெளியீட்டு விழாவில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ், இலங்கை உயர் நீதிமன்ற சிரேஷ்ட நீதியரசர் எஸ். துரைராஜா, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிரபா குமாரரத்னம் ஆகியோருடன், சாயி மத்திய நிலையத்தின் இலங்கை தலைவர் எஸ். என். உதயநாயனன், தபால் திணைக்களத்தில் முத்திரை வெளியீட்டுப் பிரிவின் பணிப்பாளர் லங்கா டி சில்வா, விளம்பரப் பிரிவு சிரேஷ்ட அதிகாரி எஸ். ஜலதீபன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.





