மட்டக்களப்பு பயனியர் வீதி மதர்ஸ் கெயார் மொன்டசரி ( Mother's care montessori) பாலர் பாடசாலையின் ஆசிரியர் தின நிகழ்வு

 

 









 மட்டக்களப்பு பயனியர் வீதி மதர்ஸ் கெயார் மொன்டசரி ( Mother's care montessori) பாலர் பாடசாலையின் ஆசிரியர் தின நிகழ்வு நேற்றைய  தினம் ( 06/10/2025) மதர்ஸ் கெயார் மொன்டசரி ஆசிரியர் தின நிகழ்வு     சிறுவர்களால்  விமர்சையாக கொண்டாடப்பட்டது.

ஆரம்ப நிகழ்வாக   சிறுவர்களால்    ஆசிரியர்களுக்கு   
          மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு அதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன்   நிகழ்வுகள்   ஆரம்பமானது .

  வரவேற்புரையை  தொடர்ந்து  ஆசிரியர்களை கௌரவித்ததுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகள், ஆசிரியர்களின் நிகழ்ச்சிகள் ஆகியவற்றைத் தொடர்ந்து ஆசிரியர் தினத்தை சிறப்பிக்கும் முகமாக கேக் வெட்டப்பட்டு  அனைவருக்கும் பகிரப்பட்டு     நிகழ்வு  இனிதே நிறைவேறியது.