மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச்செயலாளர் தோழர் டில்வின் சில்வா ஏறாவூரில் அமைந்துள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்திற்கு (ESSCA) விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
புற்றுநோயாளர்களுக்கு மிகவும் முக்கியமான வைத்தியசாலையாக சேவைகளை வழங்கி வரும் குறித்த நிலையத்தின் செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், எதிர்கால சமூக நலத்திட்டங்கள் குறித்து பயனுள்ள கலந்துரையாடலிலும் டில்வின் சில்வா ஈடுடட்டார்.
இவ்விஜயத்தின் போது, தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச செயலகங்க அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுதலைவருமான கந்தசாமி பிரபு மற்றும் தேசிய மக்கள் சக்தியின் ஏறாவூர் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் கல்குடா நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr முரளீஸ்வரன்., தொழிலதிபர் அமீர், வைத்திய நிபுணர்கள், நிலையத்தின் செயற்பாட்டுக்குழுவினர் எனப்பலரும் உடன் கலந்து கொண்டனர்.










