தாயக செயலணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நாவற்காடு பிரதேசத்தில் மாணவர்கள் கௌரவிப்பு...












தாயக செயலணியின் ஏற்பாட்டில் இம்முறை இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் நாவற்காடு பிரதேசத்தில் சித்தியெய்திய மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

அமைப்பின் பிரதேச ஒருங்கிணைப்பாளர் அருள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர், நாவற்காடு நாமகள் வித்தியாலய அதிபர், நாவற்காடு கனிஷ்ட வித்தியாலய அதிபர், அக்னி சிறகுகள் அமைப்பின் செயலாளர், நாவற்காடு கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது கடந்த புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மற்றும் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு கல்விச் செயற்பாடுகளுக்கு உகந்த புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், பதக்கங்கள், நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன், குறித்த மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்த ஆசிரியருக்கான கௌரவிப்புகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ந.குகதர்சன் 

சுற்றுலா பிரதேசமாக விளங்கும் பாசிக்குடா அனிலானா கொட்டலுக்கு அருகிலுள்ள பற்றைக்காடுகள் தனியார் தென்னந் தோப்புகளில் திடீரென தீப்பற்றியது. 

தகவல் அறிந்து சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன்  மற்றும் உப தொழிலாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து சபை தண்ணீர் வௌசர். ஓட்டமாவடி சபை வௌசர் மாநகர சபை தீயணைக்கும இயந்திரம் கொண்டு தீயினை கட்டப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

இராணுவத்தினரும் பங்களிப்பு செய்திருந்தனர். கோறளைப்பற்று பிரதேச சபை தொழிலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் சுற்றுலா விடுதி மேலாளர் மாகீர்  ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

கோறளைப்பற்று பிரதேச சபைக்கு தீயணைப்பு இயந்திரம் இல்லை. இதனால் இப்பிரதேசத்தில் அடிக்கடி ஏற்படும் தீ பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு சிரமமாகவுள்ளதாகவும் மட்…