சிறுவர் முதியோர் தின நிகழ்வு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் இடம்பெற்றது.


பிரதேச செயலாளர் சி.சுதாகர் தலைமையில் கற்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் இடம்பெற்ற நிகழ்வில் தவிசாளர் இ.திரேசகுமாரன், சுகாதார வைத்திய அதிகாரி, உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கோட்டக்கல்வி பணிப்பாளர், சமுர்த்தி வங்கி முகாமையாளர் மற்றும் பாடசாலை அதிபர், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

சிறுவர் முதியோர்களின் பல்வேறு நிகழ்வுகளுடன் இடம்பெற்ற இந்நிகழ்வானது சிறுவர் மேம்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர், முன்பிள்ளை சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்றது.