உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு மட்/மமே/மகிழவட்டவான் மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான பல விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று பரிசில்கள் வழங்கியதோடு கடந்த வருடம் பல்கலைக் கழகம் தெரிவான மாணவர்களும் கணித ஒலிம்பியாட், விஞ்ஞான ஒலிம்பியாட் , சமூக விஞ்ஞானப்போட்டி, தமிழ்மொழி தினப்போட்டி , ஆங்கில தினப்போட்டி, க.பொ.த( சா/தரப்)பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்கள் மற்றும் மாகாண மட்டத்தில் எல்லே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களும்,மெய்வல்லுனர் விளையாட்டுகளில் மாகாண மட்டத்தில் சாதனை புரிந்த மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.