மட்டக்களப்பில் பிரசித்த பெற்ற ஆலயங்களில் ஒன்றான பாசிக்குடா ஸ்ரீ முருகன் ஆலயத்தில் நாற்பது வருடங்களுக்கு பின் சூர சம்ஹார நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது .
கந்தஷட்டி விரத இறுதி நாளாகிய திங்கட்கிழமை முருகப்பெருமானுக்கு விசேட பூஜை நடைபெற்று சூரன்போர் நடைபெற்றது. இதன் போது பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு முருகப்பெருமானை வணங்கினர்.
சூர சம்ஹாரம் முடிவடைந்து சுவாமிக்கு பட்டுச்சாத்தி விசேட பூஜை நடைபெற்றது.
இவ்வாலயமானது பழமையான ஆலயமாக இருந்தாலும் பதிதாக நிர்மாணம் செய்யப்பட்டு அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்று முதன் முறையாக சூரசம்ஹாரம் நடைபெற்ற ஆலயமாகும்.
சுவாமியை தரிசிக்க மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருந்து அடியார்கள் வருகை தந்திருந்தனர்.

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)


.jpeg)
.jpeg)
.jpeg)






