செங்கலடி மத்திய கல்லூரியின் மாணவர் ஒழுக்ககோவையை வலுவூட்டும் கலந்துரையாடல்.



















மட்டக்களப்பு - கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட செங்கலடி மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான ஒழுக்ககோவை வலுவூட்டல் தொடர்பான கலந்துரையாடல் பாடசாலையில் பிரதான மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. 

பாடசாலையில் மாணவர் ஒழுக்கத்தை விழிப்புணர்வை உயர்த்தும் நோக்கில் அதிபர் க.சுவர்ணேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இக் கலப்துரையாடலில், மதகுருமார், கல்குடா வலையக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள்,  ஆசிரியர்கள் , பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர், பழைய மாணவர் சங்க செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் செங்கலடி பிரதேச செயலக உத்தியோகத்தர், சுகாதார பரிசேதகர் , ஏறாவூர் பொலிஸ் உத்தியோகத்தர்கள்,செங்கலடி பிரதேச சபை உறுப்பினர்கள், வர்த்தக சங்கம் , சலூன் சங்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு மாணவர் ஒழுக்கம் தொடர்பான ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்தனர். 

இந்த நிகழ்வில், மாணவர்களின்  நடத்தை மாற்றங்கள்,  பாடசாலைக்கேற்ற,  சீருடை , தலைமுடி வெட்டும் முறை ,மாணவர் வரவு , ஒழுக்கம் , பாடசாலைக் காதல், சமூக ஊடகங்களின் தாக்கம், பாடசாலை விதிமுறைகளின் அவசியம் மற்றும் ஒழுக்கக்குறைவுகளைத் தடுக்க முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவான  கலந்துரையாடல்  இடம்பெற்றது.

பெற்றோர்கள் அதிகம் பிள்ளைகளில் அக்கரை எடுத்தல் , கல்வி சூழலை பாதுகாக்க பெற்றோர்–ஆசிரியர் கூட்டிணைப்பு மிக முக்கியம் என்பது இதன் போது  கலந்துரையாடலில்  வலியுறுத்தப்பட்டது.

 மாணவர்களில் மரியாதையான நடத்தை, நேர்மறை பழக்கவழக்கங்கள் மற்றும் பொறுப்பு உணர்வு உருவாக்க படசாலையில் வழிகாட்டு அமர்வுகள், கலாச்சார நிகழ்வுகள் மற்றும் ஆலோசனை மையங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டது.

கலந்துகொண்டவர்கள் அனைவரும் மாணவர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த ஒழுக்கப்பேருரைகள் தொடர்ச்சியாக நடக்க வேண்டும் என்றும் ஒருமித்த கருத்தை தெரிவித்தனர்.

 (செங்கலடி நிருபர் சுபஜன்)