2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல், மத்திய கிழக்கு போன்ற வெளிநாடுகளுக்குத் தொழில் நிமித்தம் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக, மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகள் மீட்சி அடைந்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆயிரத்து 873 பேரும், பெப்ரவரி மாதம் 22 ஆயிரத்து 271 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
அத்துடன், மார்ச் மாதம் 21 ஆயிரத்து 552 பேரும், ஏப்ரல் மாதம் 22 ஆயிரத்து 11 பேரும் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குப் பயணித்துள்ளனர்.
இந்த பின்னணியில், 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை 5 சதவீதம் குறைவடைந்து மொத்தமாக, ஒரு இலட்சத்து 43 ஆயிரத்து 37 ஆக பதிவு செய்யப்பட்டதாக மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.





