ராமகிருஷ்ண மிஷன் ஆண்கள் பாடசாலையின் கேட்போர் கூடத்துக்கு மின்விசிறி தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

 


காரைதீவு ராமகிருஷ்ண மிஷன் ஆண்கள் பாடசாலையின் கேட்போர் கூடத்துக்கு முக்கிய தேவையாக இருந்த மின்விசிறி தொகுதிகள் மயோன் குழும தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளருமான எம். றிஸ்லி முஸ்தபா அவர்களினால் இன்று (24) காலை வழங்கி வைக்கப்பட்டது.

கல்முனை கல்வி வலய காரைதீவு ராமகிருஷ்ண மிஷன் ஆண்கள் பாடசாலையின் அதிபர் துரையப்பா ஜோகனாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் திடீர் மரண விசாரணை அதிகாரி எ.எச்.அல் ஜவாஹிர், மயோன் சமூக சேவை அமைப்பு சார்பாக சிப்னாஸ் அஸீஸ், றிஸ்லி முஸ்தபா அவர்களின் காரைதீவு செயற்பாட்டாளர்களான ரகு நமசிவாயம், நவனீதன் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.