மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தேசிய சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித் திட்டத்தில் ஜனாதிபதி பதக்கம் பெறவுள்ள மாணவர்களின் செயற்திட்ட விளக்கம்









மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் ஜனாதிபதி பதக்கம் பெறவுள்ள மாணவர்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களை புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (21) சந்தித்தனர்.

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் எற்பாட்டில்  தேசிய சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சி திட்டத்தில் ஜனாதிபதி பதக்கத்திற்கான நேர்முக தேர்வினை எதிர்கொள்ளவுள்ள மட்/மே/ கொத்தியாபுலை கலைவாணி வித்தியாலய மாணவர்கள் ஐவர்

 இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி பதக்க பெறவுள்ள ஐந்து மாணவர்களினால் மேற்கொள்ளப்படவுள்ள எட்டு செயற்திட்டங்கள் தொடர்பான விளக்கங்களை அரசாங்க அதிபருக்கு தெரிவித்தனர்.

சுற்றாடல் முன்னோடி மாணவர்களினால் பிரதேச செயலக பிரிவுகளில் சமூக மட்டத்தில் மாற்றத்தையும் விழிப்புணர்வுகளை எற்படுத்தக்கூடிய விடயங்கள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் போது அரசாங்க அதிபரினால் பதக்கம் பெறவுள்ள மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி பாராட்டினார்.

இந் நிகழ்வில்  மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவி பணிப்பாளர் தங்கையா சுந்தரேசன், மாவட்ட சுற்றாடல் அதிகாரி திருமதி. ஸ்ரீவித்தியன் காயத்திரி கலந்து கொண்டனர்