புதிய அரசாங்கத்தினால் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை தடுக்கும் விசேட செயல் திட்டம் மட்டக்களப்பில் இன்று முன்னெடுப்பு
புதிய அரசாங்கத்தினால் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை தடுக்கும் செயல் திட்டம் தற்போது கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவுக்கமைவாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
இதற்கு அமைய மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் இன்று காலை மாவட்ட போக்குவரத்து திணைக்களம் மற்றும் மட்டக்களப்பு தலைமையக நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசார் இணைந்து விசேட வீதி பரிசோதனை செயல்திட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்
தற்போது மாவட்டத்தில் அதிகரித்து வரும் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகன விபத்துக்களை தவிர்க்கும் நோக்குடன் இந்த விசேட செயல் திட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது
இதன் போது பிரதான வீதிகள் ஊடாக பயணிக்கும் வாகனங்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளினால் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் போக்குவரத்து பாவனைக்கு உரிய முறையில் காணப்படாத வாகனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் முகமாக வாகனங்கள் முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவற்றின் பிரேக்குகள் டயர்கள் சிக்னல் லைட்டுகள் என்பன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பாதுகாப்பற்ற முறையில் காணப்படும் வாகனங்களை திருப்பி அமைப்பதற்காக 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது
இதனை உரிய முறையில் கடை பிடிக்காத வாகன சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது இன்றைய பரிசோதனையின் போது சுமார் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது
இந்த விசேட பரிசோதனை செயல்திட்டத்தின் போது மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து போலீஸ் பொறுப்பு அதிகாரி மற்றும் மோட்டார் திணைக்கள உயர் அதிகாரிகள் போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டிருந்தனர்.
வரதன்
.jpeg)



%20-%20Copy.jpeg)





