தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அருளைப் பெறுவதற்காக இந்து மக்கள் அனுஸ்டிக்கும் விரதங்களில் மிக முக்கிய விரதமாக கந்த சஷ்டி திகழ்கின்றது.
இந்த கந்தசஷ்டி விரதத்தின் ஆறாவது நாளான இன்று திங்கட்கிழமை பல இந்து ஆலயங்களில் சூரன்போர் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.
அந்த வகையில் மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் சூரன்போர் நிகழ்வுகள் நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இடம்பெற்றது.
பல வடிங்கள் எடுத்து வந்த சூரபத்மனை பக்த அடியார்களின் அரோகரா கோசத்திற்கு மத்தியில் முருகப்பெருமான் சங்காரம் செய்தார்.



































