மன்னார் காற்றாலை விவகாரம் மட்டக்களப்பில் முன்னெடுத்த போராட்டம்.












மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 03.10.2025 இன்று காலை வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இடம்பெற்றது.

குறித்த போராட்டம், மன்னார் மாவட்டத்தில் இடம்பெறும் முறையற்ற அபிவிருத்தி திட்டங்களுக்கும் தொடர்ச்சியான அடக்குமுறைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து  கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக காலை 10.00 மணிக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சிவில் அமைப்புகள் குறித்த  போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது, போராட்டக்காரர்கள், மன்னார் தீவுக்குள் காற்றாலை திட்டம் வேண்டாம், அள்ளாதே அள்ளாதே, எங்கள் மண்ணை அள்ளாதே’ விவசாயத்தை புதைத்து  மின் உற்பத்தி தேவையா, இலங்கை மக்களின் நிலங்களை பறித்து அன்னிய நாட்டுக்கு வழங்குவதே அபிவிருத்தியா, என கோஷங்களை எழுப்பியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.