இந்திய, இலங்கை இருநாட்டு கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 8.10.2023 அன்று நாகையிலிருந்து இலங்கைக்கு பன்னாட்டு பயணியர் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது.
சுற்றுலாப் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இச்சேவையை இந்த ஆண்டு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தியுள்ளனர். பயணிகளின் வசதிக்காக, நவம்பர் மாத கடல் சீற்றம் மற்றும் புயல் எச்சரிக்கை நாட்களைத் தவிர்த்து, பொங்கல், கிறிஸ்மஸ், புத்தாண்டு பண்டிகை நாட்களில் நாகையிலிருந்து இலங்கைக்கு கப்பல் இயக்க சுபம் கப்பல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், 30 ஆண்டுகால கால நிலை தகவல்களின் அடிப்படையில், நவம்பர் மாதத்தைத் தவிர்த்து டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கப்பல் சேவை நடைபெறும் என சுபம் கப்பல் நிறுவனத் தலைவர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
கடல் சீற்றம் மற்றும் பலத்த காற்று வீசும் காலங்களில் மட்டுமே கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும்.