அம்பாறை
மாவட்டம் திருக்கோவில் பிரதேசம் மீண்டும் பாரிய கடலரிப்பை சம காலத்தில்
சந்தித்து வருகிறது.அதனால் கரையோர 7000 குடும்ப மக்கள் பெரும் ஆபத்தை எதிர்
நோக்கி வருகிறார்கள்.
கடந்த
ஐந்து ஆண்டுகளில் பல முயற்சிகள் எடுத்தும் பலனளிக்காத நிலையில் அங்குள்ள
ஓய்வு நிலை கிராம சேவை நிருவாக உத்தியோகத்தரும் திருநாவுக்கரசு நாயனார்
குருகுல பணிப்பாளரும் பிரபல சமூக செயற்பாட்டாளருமான கண்ணன் என
அழைக்கப்படும் கண.இராசரெத்தினம் விரக்தியுடன் தனது உள்ளக்குமுறலை
ஊடகங்களுக்கு தெரியப்படுத்தினார்.
அவர் கூறுகையில்..
அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவு சுமார்
10 ஆயிரம் குடும்பங்களில் 35 ஆயிரம் சனத்தொகையை கொண்ட ஒரு பிரதேம்.
தாண்டியடி முதல் தம்பட்டை வரை வரையுள்ள 22 கிராம சேவையாளர் பிரிவுகளில்
11 பிரிவுகள் கடலை அண்டிய கரையோர பிரதேசமாகும். அதில் சுமார் 7000 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
கடந்த ஐந்து வருட காலத்திலே கடல் அரிப்பினால் இப்பிரதேசம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது .
அங்கு பாடசாலைகள் சமய நிறுவனங்கள் மற்றும் வைத்தியசாலை என்பன அமைந்திருக்கின்றன .
கடந்த ஐந்து வருட காலத்திலே பிரதேசம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது .
இரண்டு
புறமும் அதிகமான அரிப்புகளை சந்தித்த இந்த கிராமம் தற்போது முழுமையாக
கடந்த மூன்று வருட காலத்தில் கரையோரத்தில் இருந்த பாதை அழிக்கப்பட்டு
மீனவர் கட்டிடம் குருகுலம் மற்றும் சிறுவர் இல்ல கட்டிடங்கள் முழுமையாக
சேதமாக்கப்பட்டது.
சித்திர வேலாயுத சுவாமி ஆலய
முன்றலில் பாரிய அரிப்பு ஏற்பட்டு வீதி தொடக்கம் வாடிகள் தென்னைமரங்கள்
கிணறுகள் கடலுக்குள் சங்கமமாகி உள்வாங்கப் பட்டிருக்கின்றன.
இதனைத்
தொடர்ந்து பல்வேறு அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலகம் சமய நிறுவனங்கள்
ஆலயங்கள் மற்றும் ஏனைய பொது அமைப்புகள் இணைந்து இதற்கு பாரியளவு
நடவடிக்கைகளை சமூக ஊடகங்கள் ஊடாகவும் பத்திரிகை செய்திகளுடன் காண்பித்து
நடவடிக்கைகளுக்காக கடும் முயற்சி எடுத்தன.
ஆனால்
இந்த திருக்கோவில் ஆலயம் முன்பாக 50 தொடக்கம் 75 மீட்டர் கூட இல்லாத ஒரு
கல்லணையைத் தவிர வேறு எந்த ஒரு சம்பவங்களும் நடைபெறவில்லை.
இதனால் சமூக ஊடகங்கள் அரச நிறுவனங்கள் ஓய்ந்திருக்கின்றன.
அதேவேளை
அண்மை கிராமங்கள் இதே காலத்தில் பாதிக்கப்படுகிற பொழுது அதாவது
அட்டாளைச்சேனை ஒலுவில் நிந்தவூர் சாய்ந்தமருது போன்ற பிரதேசங்களில் பல கோடி
ரூபாய் செலவில் அணைகள் மற்றும் பல வேலைத் திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன.
வரவேற்கிறோம்.
ஆனால் தமிழ் பிரதேசங்கள் கடந்த காலங்களைப்போல தற்காலத்திலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
2025
ஆம் ஆண்டில் இப்பொழுது சுமார் மூன்று மீட்டர் நீளம் அளவிலே கடலில்
உள்வாங்கப்பட்டு பல மலசல கூடங்கள் கிணறுகள் உள்வாங்கப்பட்டுள்ளன.
இங்குள்ள
நிறுவனங்கள் அமைப்புகள் திணைக்களங்கள் அதிக அக்கறையோடு துரிதமாக
செயற்பட்டு இந்த மக்களையும் இந்த பிரதேசத்தையும் வாழ்வாதாரத்தையும்
பாதுகாக்குமாறு வினயமாக வேண்டிக்கொண்டிருக்கின்றோம் நன்றி வணக்கம்.
என்றார்.
( வி.ரி. சகாதேவராஜா)