காவல்துறை திணைக்களத்தில்
உயர்பதவிகள் முதல் கடைநிலை பதவிகள் வரை பல்வேறு பதவிகளில் உள்ளவர்கள்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்புகளைப் பேணிவருவது குறித்து
ஆராய்வதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அதன்படி, விசாரணைகளை முன்னெடுப்பதற்கு
காவல்துறை விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரங்களை அதிகரிப்பது குறித்து
கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறை மா அதிபரின் நேரடி
மேற்பார்வையின் கீழ் செயல்படும் காவல்துறை விசேட புலனாய்வுப் பிரிவு,
காவல்துறை அதிகாரிகளின் உள்ளக நடத்தை மற்றும் குற்றச்சாட்டுகளை விசாரணை
செய்கிறது.
தற்போது இந்தப் பிரிவிலுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதனால் விசாரணைகள் தாமதமாகுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, இந்தப் பிரிவுக்கு கூடுதல்
அதிகாரிகளை நியமித்து, புலனாய்வு அமைப்புகளுடன் நேரடித் தொடர்பு
கொள்வதற்குத் தேவையான அனுமதியுடன் கூடிய அதிகாரங்களை வழங்குவதற்கு
திட்டமிடப்பட்டுள்ளது.